திரையரங்குகள் திறக்கப்படுமா?- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (28/10/2020) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.…

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்…. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பருவகாலம் தமிழகம்,…

மனசு சஞ்சலப்படுகிறதா.? புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பகிர்ந்த ஞானம்

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரு.ம் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.…

‘எல்லாம் சிறப்பாக இருந்தது’… கே.எல்.ராகுல் மகிழ்ச்சி

ஷார்ஜா: ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக அமைந்தது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல்

அறிவியல் ஆயிரம்: நிலவில் கிடைத்த தண்ணீரும் விண்வெளி ஆய்வின் அடுத்த பாய்ச்சலும்

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள மூலக்கூறு நீரின் தெளிவான முதல் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். முன்னர் நினைத்ததைவிட சந்திரனில் அதிகளவு நீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகளை அமெரிக்காவின் விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையமும் (நாசா), ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ போன்ற அறிவியல் இதழ்களும் வெளியிட்டுள்ளன. மேலும், தனித்தனி ஆய்வுகளில் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகள், எதிர்காலத்தில் சந்திரன் நோக்கிச் செல்லும் பயணங்கள் மற்றும் பணிகளில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்…

யாரும் தோற்க விரும்புவதில்லை: தோனி மனைவி சாக்‌ஷி உருக்கம்

ஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்‌ஷி. துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய சிஎஸ்கே அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. நேற்றைய ஆட்டத்தில்…

கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ரெமோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக கார்த்தியும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார். ரூபன் உள்ளிட்ட சிலர் படதொகுப்பு செய்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை…

சென்னையில் வெளுத்து வாங்க போகும் மழை: நார்வே வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நேற்று மாலை திடீரென வானம் இருண்டு சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் சென்னை மழையை எதிர் நோக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை…

தமிழ் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசின்…

“விவசாயிகளின் உழைப்பு வீணாவது வேதனையளிக்கிறது” – சரத்குமார்

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது வேதனையளிக்கிறது என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசனப் பகுதிகளுக்கு தேவையான நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு விளைச்சல் அதிகரித்த போதிலும், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் சார்ந்த டெல்டா விவசாயிகள் வேதனையில் வாடியுள்ளனர்.…