ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு கோயில்- ஆளும் கட்சி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

ஆந்திர மாநிலத்தில் குறைந்த வயதில் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அவரது ‘நவரத்தினா’ திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெகனுக்கு கோயில் கட்ட, மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கோபாலபுரம் மண்டலம், ராஜம்பாளையம் கிராமத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். அங்கு ஜெகனுக்கு கோயில்…

கரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர்களின் மெய்நிகர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: தொடக்கத்தில் இருந்தே கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தரம்மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஜனவரியில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பாகவே மக்களுக்கு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது. ஜனவரி 18 முதல்,…

பொறியியல் கல்லுரிகளில் ஆன்லைன் வகுப்பு… தேதியை வெளியிட்டது அண்ணா பல்கலை…

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவர்களை தவிர அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த…

தமிழக மக்கள் இதை செய்தால் ஊரடங்கு இல்லை.. முதலமைச்சர் அறிவிப்பு.!!

தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு, மதுரையில் ஆய்வு செய்தார். அதை எடுத்து இன்று வெள்ளிக்கிழமை திருநெல்வேலி செல்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தற்போது கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்றபோதும், தமிழ்நாட்டில் நல்ல சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா…

மழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1 லட்சத்து18,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்குகிறது. இத்தகைய கரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே, மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு போன்ற நோய் பாதிப்புகளைத் தடுக்கவும் தமிழக…