கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு மார்ச் 27-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்றை தடுக்க முக்கிய நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றனர்

கரோனா வைரஸ் அச்சம்: 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?- மத்திய அரசு பதில்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 21 நாட்கள் வீடடங்கு, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த 25-ம் தேதி அமல்படுத்தியது. இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள்…