தமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்: மின்சார வாரியம்

சென்னை: தமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஃபிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மற்ற மின்சாதனங்களை அனைக்க வேண்டாம் என மின்சார வாரியம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சாரபிரச்னை ஏற்படும் என தெரிவித்துள்ளது.