சமைக்க தேவையானவை
 மஞ்சள்தூள் – ஒருகரண்டி
 வெள்ளை சூரை மீன் – பெரியதாக நான்கு
 மல்லி புதினா – தலா ஒருகைப்பிடி
 உப்பு – தேவையான அளவு
 மிளகு – இரண்டு தேக்கரண்டி
 பூண்டு – 10பல்
 வினிகர் – நான்கு கரண்டி
 பச்சை மிளகாய் – 50கிராம்

உணவு செய்முறை : சூரை மீன் தந்தூரி
Step 1.

முதலில் மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்.அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்.

Step 2.

மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

Step 3.

பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்.

Step 4.

அவெனை 280 சூடாக்கி அதில் மீனை வைக்கவும்.

Step 5.

பின்பு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து பின்பு பரிமாறவும்.

Leave a Comment