சமைக்க தேவையானவை
கணவா மீன் – 1 கிலோ கிராம்
மஞ்சள்தூள் – 3/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
மல்லித் தூள் – 1 1/2 மேசைக் கரண்டி
இஞ்சி – 1/2 கப் )நறுக்கியது)
கரமசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 1/2 மேசைக் கரண்டி
தக்காளி – 2பெரியது
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
பூண்டு – 7பற்கள் உப்பு – – தேவையான அளவு
வெங்காயம் – 2 நறுக்கியது
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
குறிப்பு
உணவு செய்முறை : கணவா றோஸ்ட்
Step 1.
முதலில் கணவா மீனை கழுவி அதனை சிறு வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அதனை 1/2தேக்கரண்டி நல்ல மிளகு தூளில் புரட்டி எடுக்கவும்.
Step 2.
பின்பு அதனுடன் 1/2தேக்கரண்டி மஞ்சள் தூள்,கறி வேப்பிலை பொடித்த இஞ்சி,பூண்டுமற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
Step 3.
பின்னர்ஒரு விசில் வரும் வரை நீர் சேர்க்கக் கூடாது .அதே நேரம் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த்தும் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Step 4.
பின்பு தீயைக் குறைத்து அதனுடன் மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டிநல்ல மிளகு தூள் தானியா தூள்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
Step 5.
நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
Step 6.
அதனுடன் தேங்காய் துருவல், கரம் மசாலா, வேக வைத்த கணவா மீன் மற்றும் நீர் சேர்த்து குக்கரில் வைத்து 15 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.பின்பு பரிமாறவும்