சென்னை,

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்தள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்த இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியாகாமல்போனது.

சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சூர்யாவின் சூர்ரைப்போற்று படம் போன்று மாஸ்டர் படமும் ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுதியாகியிருக்கிறது.

மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அரசு அனுமதியை ஏற்று தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா பயம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. இதைத்தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

Leave a Comment