தர்மபுரி

கொரோனா காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே ஆட்சியரிடம் புகார் மனுக்களை தெரிவிக்கும் விதமாக செல்போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய ஆட்சியர் கார்த்திகா, இந்த செயலி மூலம்

பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை பதிவிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக மனுக்களை அனுப்பிவைக்க முடியும் என்றும், இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். இந்த செயலி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலைகிராம

மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், சிப்காட் வளாகம் அமைக்க தேர்வுசெய்யப்பட்டுள்ள பகுதியில், முதற்கட்டமாக ஜவுளிப்பூங்கா விரைவில் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment