சமைக்க தேவையானவை
அரிசி – 150 கிராம்
கத்திரிக்காய் – 150-200 கிராம்
எண்ணெய் – 3- 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
பெருங்காயப்பொடி – 2 பின்ச்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
புளித்தண்ணீர் – கால் கப்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 1
முந்திரி பருப்பு – 15
வெல்லம் – மிகச் சிறிய துண்டு
வாங்கி பாத் பொடி – 3-4 டீஸ்பூன்
கொப்பரை தேங்காய் துருவியது – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
உணவு செய்முறை : கத்தரி சாதம்
Step 1.
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு,கடலைபருப்பு போட்டு வதக்கவும்,கடுகு வெடிக்கும் பொழுது முந்திரி பருப்பு ,நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.

Step 2.
கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். மூடி நன்கு வேக விடவும்.

Step 3.
கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விடவும்.நன்கு கொதிக்கட்டும். வாங்கி பாத் பொடி சேர்க்கவும்.வாங்கி பாத் பொடிக்கு ( முழு மல்லி -3 tsp, உளுத்தம் பருப்பு – 1tsp,கடலை பருப்பு – 1 tsp, மிளகாய் வற்றல் -2 , பட்டை – சிறு துண்டு, கிராம்பு – 1 வறுத்து பொடிக்க வேண்டும்) அல்லது ரெடி மிக்ஸ் உபயோகிக்கலாம்.

Step 4.
நன்கு கலந்து விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். கொப்பரை தேங்காய் சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.

Step 5.
வடித்த சாதம் சேர்த்து பிரட்டவும்.உப்பு சரிபார்க்கவும். ஒரு பவுலில் எடுத்து சூடாகப் பரிமாறவும். சுவையான வாங்கி பாத் தயார்.

Leave a Comment