ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே இனிவரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருப்பதால், இது முக்கியமான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னையில் பிராவோவுக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கரண் சர்மாவுக்குப் பதில் பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் ஜெய்தேவ் உனத்கட்டுக்குப் பதில் அன்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Comment