சமைக்க தேவையானவை
பால் – 2 கப்,
glazed செர்ரி – 9.
அன்னாசி எசென்ஸ் – 6துளிகள்
சர்க்கரை – 1 கப், க்ரீம் – 1/2 கப்,
நறுக்கிய அன்னாசிப் பழம் – 3 கப்
கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
உணவு செய்முறை : பைனாபிள் மற்றும் செர்ரி ஐஸ்க்ரீம்
Step 1.
முதலில் கடாயில் அன்னாசியுடன் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் அன்னாசி மென்மையாகும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

Step 2.
பாலை காய்ச்சவும். கஸ்டர்ட் பவுடரை சிறிது பாலில் கரைத்து ஊற்றி, மிதமான தீயில் சுட வைக்கவும். பால் கெட்டியானவுடன் இறக்கி, ஆற வைக்கவும்.

Step 3.
அதில் க்ரீம், அரைத்த அன்னாசிப் பழக்கூழ், எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். 1 மணி நேரம் அதை ஃப்ரீசரில் உறைய வைக்கவும். அதை வெளியே எடுத்து, மிக்ஸியில் அரைக்கவும். பின்பு பரிமாறவும்.

Leave a Comment