சமைக்க தேவையானவை
சோயா தானியம் – 1/2 கப்,
சர்க்கரை – 5டீஸ்பூன்.
ஸ்ட்ராபெரி பழம் – 7
ஸ்ட்ராபெரி எசென்ஸ் – 3 சொட்டு
உணவு செய்முறை : சோயா ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்
Step 1.
முதலில் சோயா தானியத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்து, வடிகட்டி, காய்ச்சி நன்கு ஆறவிடவும். ஸ்ட்ராபெரி பழங்களை மிக்ஸியில் போட்டு கூழாக்கவும்.

Step 2.
காய்ச்சிய பாலில் ஸ்ட்ராபெரி கூழ், ஸ்ட்ராபெரி எசென்ஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அதை ஒரு மூடிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்கவும்.

Step 3.
3மணி நேரம் கழித்து இக்கலவையை மீண்டும் எடுத்து மிக்ஸியில் அடிக்கவும். டப்பாவில் இக்கலவையை நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு பரிமாறவும்.

Leave a Comment