சமைக்க தேவையானவை
பால்- 500 மில்லி
பிஸ்தா, சாக்லேட்- தேவையானவை
பால் பவுடர் 7 மேசைக்கரண்டி
சர்க்கரை பவுடர் – 50 கிராம்
உணவு செய்முறை : சாக்லேட் குல்பி
Step 1.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பால் பவுடர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும்.

Step 2.
பாலானது சுண்டி சற்று கெட்டியானதும் அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் அதனை இறக்கி அதில் பிஸ்தா மற்றும் சாக்லேட் போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

Step 3.
சாக்லேட் கரைந்ததும் அதனை ஒரு பேனில் ஊற்றி 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். மேலும் 1 மணிநேரம் ஆன பின்னர் அதனை வெளியே எடுத்து மிக்ஸரில் போட்டு ஒரு முறை நன்கு கலந்த பின் அதனை குல்பி மோல்டில் ஊற்றி அதன் நடுவே குச்சியை வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து 6 மணி நேரம் கழித்து குல்பி ரெடி.

Leave a Comment