தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அரசுப் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு நீட் பயிற்சி மையங்களில் 6,692 மாணவர்கள் பயிற்சி பெற்றுவந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதில் திரிபுரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் அதிகமாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி வாசுகி 580 மதிப்பெண் பெற்றுள்ளார் . நான்கு மாணவர்கள் 500 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் . 15 மாணவர்கள் 400 க்கும் 500 க்கும் இடையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Comment