சமைக்க தேவையானவை
பால்
சர்க்கரை – தலா ஒரு கப்
பாதாம் பருப்பு
நெய் – தலா அரை கப்.
குறிப்பு
உணவு செய்முறை : பாதாம் அல்வா
Step 1.
முதலில் பாதாம் பருப்பை முதல் நாள் இரவே ஊற வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

Step 2.
இதில், காய்ச்சிய பாலை விட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

Step 3.
அடிகனமான கடாயை சூடாக்கி, சர்க்கரையை போட்டு இளம்பாகு பதத்தில் காய்ச்சி அரைத்த பாதாம் கலவையை விட்டுக் கிளறவும்.

Step 4.
அதன் பின் கலவை பாத்திரத்தில் ஒட்டி கொண்டு வரும்போது, நெய் சிறிது சிறிதாக விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்

Leave a Comment