INGREDIENTS
சிக்கன் – கால் கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
INSTRUCTIONS
முதலில் ஒரு கிண்ணத்தில் சிக்கன், மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து கலந்து பிரிட்ஜில் ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பச்சை மிளகாயினை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை மொறுமொறுவென்று பொரித்துக் கொள்ளவும்.
அடுத்து பொரித்த கறிவேப்பிலையை மட்டும் கையால் நொறுக்கி விட வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சிக்கன் துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள் கிளறவும்.
இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை சிக்கன் ரெடி.

Leave a Comment