சமைக்க தேவையானவை
தேங்காய் – ஒன்று (சிறியது)
பொட்டுக்கடலை – 250 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
முந்திரி – 50 கிராம்
மைதாமாவு – 200 கிராம்
உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
உணவு செய்முறை : கடலை பணியாரம்
Step 1.
முதலில் தேங்காயை முக்கால் பகுதி துருவிக்கொண்டு கால்பகுதி பால் எடுக்கவேண்டும் . இப்பொழுது பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடிக்கவும். சீனியை தூளாக்கவேண்டும் .

Step 2.
பின்னர் முந்திரியை நெய்யில் வறுத்து பொடிபொடியாக நறுக்கவேண்டும் .

Step 3.
பின்பு மைதாவில் தேங்காய்ப்பால், உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். பின் தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை, முந்திரி, சீனி, ஏலக்காய்தூள் எல்லாம் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும் .

Step 4.
இப்பொழுது ஒரு மணிநேரம் கழித்து உருண்டைகள் பிடித்து மைதாவில் நனைத்து பொரிக்கவும்.

Leave a Comment