தமிழகத்தில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடு கட்டி தருவதாக, தமிழகத்திற்கு உலகவங்கி ரூ.250 மில்லியன் டாலர் கடனுதவி.

உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் கேரளா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடுகட்டி தருவதற்கான மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தமிழகத்திற்கு உலகவங்கி ரூ.250 மில்லியன் டாலர் கடனுதவி அளிப்பதாக கூறிய நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Leave a Comment