INGREDIENTS
முருங்கைக்கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – சிறிதளவு
மிளகாய் வத்தல் – 4
மிளகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
தண்ணீர் – கொஞ்சம்
கடுகு – சிறிதளவு
INSTRUCTIONS
முதலில் முருங்கைக்கீரையை வேக வைத்து கொள்ளவும். பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய், மிளகாய் வத்தல், மிளகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை அரைத்துக் கொள்ளவும். பிறகு கீரை மற்றும் பருப்பை சேர்த்து அதோடு அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து, கொதித்ததில் ஊற்றினால் முருங்கைக்கீரை பொரித்த குழம்பு தயார்.

Leave a Comment