INGREDIENTS
காலிஃப்ளவர் பூ – 1/2,
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
மிளகு – 5,
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1
சோம்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் – 1,
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
INSTRUCTIONS
முதலில் சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரையும், துவரம் பருப்பையும் குக்கரில் வேகவிட்டுக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி 2 கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.
காலிஃப்ளவர் வெந்ததும் பருப்பு மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து உப்பு, சீரகத் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியில் கறி வேப்பிலை சேர்த்து பரிமாறினால் காலிஃப்ளவர் சூப் ரெடி.

Leave a Comment