INGREDIENTS
கவுனி அரிசி – அரை கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
பால் – 1 கப்
INSTRUCTIONS
கவுனி அரிசியை நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நன்றாக ஊறிய அரிசியை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்த தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பின் உப்பு சேர்த்து கலக்கி இறக்கவும். கவுனி அரிசிக் கஞ்சி ரெடி.

Leave a Comment