INGREDIENTS
கம்பு மாவு – 2 கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
வெங்காயம் – 2
பப்பாளிக்காய் துருவல் – சிறிதளவு
அரிசிமாவு – ¼ கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
துவரம் பருப்பு – சிறிதளவு
சுண்டல் – சிறிதளவு
இஞ்சி – சிறிது
பட்டை மற்றும் கிராம்பு – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
INSTRUCTIONS
துவரம் பருப்பு, சுண்டl, இஞ்சி, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் அதோடு பப்பாளி துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, அரிசி மாவு, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடை மாவுப் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடை மாவை ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் கம்பு அடை ரெடி.

Leave a Comment