டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42, 533 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2533 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1373 பேர் உயிரிழந்த நிலையில், 11,707 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 548 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2115 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 5428 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1042 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. நேற்று வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 3023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1379 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 43 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
பிகாரில் 503 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 125 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 94 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 57 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 4549 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 1362 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 442 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 245 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 16 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 500 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 401 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 2886 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 1356 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 115 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 162 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 5 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1102 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 117 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 60 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 614 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 293 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 701 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 287 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1082 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 490 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 963 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 151 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1583 பேருக்கு பாதிப்பு; 33 பேர் பலி; 488 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2846 பேருக்கு பாதிப்பு; 156 பேர் பலி; 798 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2645 பேருக்கு பாதிப்பு; 43 பேர் பலி; 754 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.

Leave a Comment