INGREDIENTS
மட்டன் (எலும்பில்லாதது) – 200 கிராம்
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
மிளகாய்த்தூள் – 15 கிராம்
எண்ணெய் – 30 மில்லி.
மஞ்சள்தூள் – 10 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
INSTRUCTIONS
இஞ்சி மற்றும் பூண்டினை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மட்டனை நன்றாகக் கொத்திக் கொள்ளவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், நறுக்கிய இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் கலந்து, 3 மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து ஊறவைத்த மட்டனை சேர்த்து, தண்ணீர் ஆவியாகும் வரை வேகவைக்கவும்.
வெந்தபின், உப்பு மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
இப்போது காரசாரமான ஹைதராபாதி கீமா ரெடி.

Leave a Comment